
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேகநபரிடமிருந்து 13 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
