
இணையத்தில் கொள்வனவு: பண மோசடி செய்த இருவர் கைது
இணையத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்து விற்பனையாளருக்குப் பணம் செலுத்த மறுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாரியபொல மற்றும் சுனந்தபுர பிரதேசங்களில் வசிக்கும் 20 மற்றும் 24 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 4 கைத்தொலைபேசிகள், 2 மடிக்கணினிகள் மற்றும் ஒரு ரவுட்டர் என்பனவும், இணைய விற்பனையாளர் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் 2 கைக்கடிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இணைய விற்பனையாளரின் புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
