
கோவிந்தன் கருணாகரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைப்பு
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் 2024ம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட சில பொது அமைப்புக்கள் மற்றும் கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயம் பாடசாலைகளுக்கு பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது பல நாட்களாக திட்டமிடப்பட்டு இருந்தது
பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டிருந்ததினாலும் தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதினாலும் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொள்ள முடியாமையினால் பிரதேச செயலாளரினால் குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெ.திருச்செல்வம் தலைமையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற இந் நிகழ்வில், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர் கங்காதரன், பாடசாலை அதிபர் ந.சுரேந்திரகுமார், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

