கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்மோதர குமாரி எல்ல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

வறக்காப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலமானது பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்