27 ஆண்டுகளின் பின்னர் இலங்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியா? ஏமாற்றமா?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 2.30க்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த தொடரின் முதலாவது போட்டி சமநிலையில் நிறைவடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று 1 – 0 எனும் அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

27 ஆண்டுகளின் பின்னர், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் இருதரப்பு தொடர் ஒன்றை இந்திய அணி இழக்கும் அல்லது கைப்பற்றாமல் போகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் தொடரை 1க்கு 1 என்ற அடிப்படையில் சமன் செய்யவே முடியும்.

1997ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கை அணியுடன் இடம்பெற்ற 11 இருதரப்பு ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இந்த தொடருடன் அது முடிவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்