
வெளிநாட்டு ஆசை காட்டி பண மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் விளக்கமறியலில்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் செலாவதற்காக 25 இலட்சம் ரூபா பணத்தினை நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் சிங்கப்பூர் வரையில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டு மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இவ்வாறு பணத்தினை கொடுத்து ஏமாந்தவரும் அவரது சகோதரனும், நீர்கொழும்பை சேர்ந்த நபரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து தாக்குதல் நடாத்தி ஐந்து இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுக் கொண்டனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், தாக்குதலை நடாத்திய இருவரும் கைது செய்யப்பட்டு இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
