காணாமல் போயிருந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
தெமட்டகொடை தொடருந்து முனையத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த தொடருந்து முனையத்துக்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட கிணறொன்றிலிருந்து அவரது சடலம் இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளார்.
மாத்தறையைச் சேர்ந்த 47 வயதுடைய குறித்த நபர், நேற்று நள்ளிரவு முதல் காணாமல் போயிருந்த நிலையில் அது தொடர்பில் தொடருந்து முனையப் பணியாளர்கள் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில், இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையை அடுத்து, அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
