மர்மமான முறையில் உயிரிழந்த யானை

-சம்மாந்துறை நிருபர்-

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை சின்ன கொக்கநாரை வயல் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை காணப்பட்டுள்ளது.

சம்மாந்துறை மல்வத்தை சின்ன கொக்கநாரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை யானையின் சடலம் இருப்பதை விவசாயிகள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்தே குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யானையின் இறப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

அதேவேளை, அப்பகுதியில் மர்மமான யானையின் இறப்பு தொடர்பில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், வனஜீவராசிகள் திணைக்களத்தினர், குறித்த யானையின் மரணம் தொடர்பான காரணத்தை மருத்துவ பரிசோதனையின் பின்னரே அறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்