பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைப்பு

பங்களாதேஷின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு போராட்டக்காரர்கள் காலக்கெடு விதித்த சில மணிநேரத்தில் நாடாளுமன்றம் இவ்வாறு கலைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முப்படைகளின் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர்கள் இயக்கத்தின் தலைவர்கள் ஆகியோருடன் ஜனாதிபதி மொஹமட் சஹாபுதீன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு வழிவகுக்கும் வகையில் தீர்மானமொன்றை எடுத்த ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக பங்களாதேஷின் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்