பங்களாதேஷ் நாடாளுமன்றத்திலிருந்த பொருட்கள் கொள்ளை

பங்களாதேஷ் நாடாளுமன்றத்திற்குள் ஆயிரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடுருவியுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள பொருட்களை கொள்ளையிட்டு வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த நிலையில் பின்னர் அந்த நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டதுடன், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்