
அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பம்: காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது
எந்தவொரு காரணத்திற்காகவும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
இந்த கால அவகாசம் எதிர்வரும் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவிருந்த நிலையில் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
