
ஜனாதிபதித் தேர்தலுக்கு 17,140,354 வாக்காளர்கள் தகுதி
அடுத்த மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக 1 கோடியே 71 இலட்சத்து 40,354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின்படி, கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதன்படி, குறித்த மாவட்டத்தில் 18 இலட்சத்து 81,129 வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
