காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

அநுராதபுரம், நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம், நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் தனது காணிக்குச் சென்று மீண்டும் வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் போது காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்தவர் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்