சிகரெட்டுகளை கடத்த முயன்றவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான 12,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்