
அருண தர்ஷன அரையிறுதி சுற்றுக்குத் தகுதி
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் அருண தர்ஷன சிங்கபுரகே ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ளார்.
நேற்று ஞாயிற்று கிழமை இரவு இடம்பெற்ற இந்த போட்டியில் அவர் போட்டி தூரத்தை 44.99 வினாடிகளில் நிறைவு செய்து மூன்றாம் இடத்தை பெற்றதையடுத்து இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் அரையிறுதிச் சுற்று நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
