வீதியை விட்டு விலகி பள்ளத்திற்குள் பாய்ந்த லொறி

-பதுளை நிருபர்-

ஹப்புத்தளை தங்கமலை பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை காலை லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறி குருனாகலா பகுதியில் இருந்து நுவரெலியா வெலிமடை ஹப்புத்தளை ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த போது ஹப்புத்தளை தங்கமலை பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பல்லடத்தில் வீழ்ந்தது விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான லொறியில் சாரதியும் நடத்துனரும் மாத்திரமே இருந்ததாகவும் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்