
குவைத்தில் கைதான 24 இலங்கையர்களும் விடுவிப்பு
குவைத்தில் கடந்த 2ஆம் திகதி கைதான 24 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
‘அக்கரையில் நாம்’ என்ற அமைப்பின் குவைத் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் குறித்த இலங்கையர்கள் கைதானதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உரிய அனுமதியின்றி இசைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் இசைக்கலைஞர்களும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
