
இலங்கை கடற்பரப்பில் 4 இந்திய மீனவர்கள் கைது
யாழ் காரைநகரை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்போது படகொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இந்திய மீனவர்கள் கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதுடன், அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
