ஐஸ் போதைப்பொருளுடன் களுத்துறையில் ஒருவர் கைது

களுத்துறை, வாதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொஹொத்தரமுல்ல பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வாதுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 15 கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்