
வாகன விபத்து: 6 பேர் வைத்தியசாலையில்
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை – பாமஸ்டன் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றும், நுவரெலியா நோக்கிப் பயணித்த பாரவூர்தி ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த 6 பேரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் ஒரு ஆணும், 5 பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில், லிந்துலை காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
