3 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை 3 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முட்டை விலை அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இம்மாதம் முதல் முட்டைகளை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் முட்டையொன்றை 38 அல்லது 40 ரூபாவிற்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்