கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு நீங்க
கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு நீங்க
கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு நீங்க
🟤கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருக்கும். உடலில் இரும்புச் சத்து வெகுவாகக் குறைந்தால், அது உங்களுக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்கும் சில இயற்கை உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இரும்புச்சத்தை அதிகரிக்கும் சில ஆரோக்கியமான உணவுகள் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
🔷கர்ப்ப காலத்தில் உடலில் இரும்புச்சத்தை பராமரிக்க பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் உலர் திராட்சையை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். இந்த உலர் பழங்களில் இரும்பு, மாக்னீசியம், காப்பர், வைட்டமின் ஏ, சி ஆகியவை உள்ளன. தண்ணீரில் ஊறவைத்த 2-3 பேரீச்சம்பழங்கள், 2 அத்திப்பழங்கள் மற்றும் ஒரு தேக்கரண்டி உலர் திராட்சையை சாப்பிடுவது உடனடி ஆற்றலைத் தருவதோடு, இரும்புச் சத்தையும் அதிகரிக்கும்.
🔷மாதுளை பழத்தில் வைட்டமின் கே, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இருப்பினும், இரும்புச்சத்து நிறைந்த பல பழங்கள் இருந்தாலும், மாதுளை சாப்பிடுவது இரத்த சோகையை போக்க சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மாதுளையில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி, நம் உடல் இரும்புச்சத்தை எளிதில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
🔷பாதாமில் உள்ள இரும்புச்சத்து, கருவின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதய வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. இது தாயின் உடலில் இருந்து குழந்தைக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கும் உதவுகிறது. மேலும் இது கர்ப்பிணிப் பெண்களுக்கு சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது. நீங்கள் கர்ப்பமாக இருந்தால், தண்ணீரில் ஊறவைத்த பாதாம் பருப்பை தாராளமாக உட்கொள்ளலாம்.
🔷பீட்ரூட் மற்றும் கேரட்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த மூன்றையும் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு இரும்புச்சத்து அதிகம் கிடைக்கும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்ற இரண்டிலும் இருந்து கிடைக்கும் இரும்பைச்சத்தை உடல் உறிஞ்சுவதை அதிகப்படுத்துகிறது.
🔷ஒரு கப் சமைத்த பச்சைப்பயறில் அதிகளவு ஃபோலேட் உள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிகம் தேவைப்படும் இரும்புச்சத்து, புரதம் மற்றும் நார்ச்சத்தும் இதில் அதிகம். இதன் அதிகபட்ச நன்மைகளைப் பெற, பச்சையாக சாப்பிடுவதற்குப் பதிலாக முளைகட்டிய பயறுகளை சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
🔷கேழ்வரகில் இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலேட் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் தாயின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமாகும்.
🔷தேங்காயில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. எனவே தேங்காயை பேரீச்சம்பழம்/வெல்லம் சேர்த்து சாப்பிடுவது அல்லது தேங்காய் பால் பருகுவதால் இரத்த சோகையை எதிர்த்து போராடவும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இது நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கலை கூட தடுக்கிறது.
🔷ஒவ்வொரு 100 கிராம் பொரி கடலையில் 22% இரும்புச்சத்து உள்ளது. கர்ப்ப காலத்தில் இதை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும். இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வு மற்றும் குமட்டலில் இருந்தும் ஓரளவு நிவாரணம் அளிக்கும்.
கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு நீங்க
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்