ஒலிம்பிக்கில் ஆனந்த் அம்பானி – ராதிகா ஜோடி பங்கேற்பு

அண்மையில் திருமணம் செய்து கொண்ட ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ளனர்.

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி சர்வதேச ஒலிம்பிக் குழுவில் உறுப்பினராக உள்ளதால், அவரும் இதில் பங்கேற்றுள்ளதுடன் அவர்களுடன் முகேஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் பிரமால் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்குப் பிறகு பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதல்முறை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது பார்வையாளர்களை ஈர்த்துள்ள நிலையில், அம்பானி குடும்பத்தின் வருகை பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்