கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் காலமானார்

இரத்தப் புற்றுநோய் காரணமாக  இந்தியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட், தனது 71 வயதில் நேற்று புதன் கிழமை காலமானார்.

கடந்த மாதம்வரை லண்டனில் இருந்த கெய்க்வாட், பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிர் இழந்துள்ளார்.

கெய்க்வாட் 1975ஆம் ஆண்டு தொடக்கம் 1987ஆம் ஆண்டுவரை இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடினார்.

பின்னர் தேர்வாளராகவும் தேசிய அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்