ஒரு தலைக்காதலால் விபரீதம்: தெருநாய்கள் கடித்து தின்ற பெண்ணின் சடலம்

இந்தியாவின் மராட்டியம் மாநிலத்தில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நவிமும்பை உரண் பகுதியில் வசித்து வந்த யாஷிரி ஷிண்டே (வயது – 22) என்ற பேலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி யாஷிரி ஷிண்டே வேலைக்கு செல்வதாக கூறிசென்றுள்ள நிலையில் வீடு திரும்பாததால் அவளது பெற்றோர் தமது மகள் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று விசாரித்த நிலையில் அவள் அன்றைய தினம் அரை நாள் விடுப்பு எடுத்து கொண்டு சென்றமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மறுநாள் காலை தங்கள் மகள் காணாமல் போனதாக பொலிஸாரிடம் பெற்றோர் புகார் வழங்கியுள்ளனர். இதன்படி பொலிஸார் வழக்கு பதிவு செய்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்த நிலையில் 26 ஆம் திகதி காலை 2 மணி அளவில் உரண் ரெயில் நிலையம் அருகே முட்புதரில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் தெருநாய்கள் கடித்து தின்றுகொண்டிருந்த நிலையில் இளம் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தமது மகள் காணாமல் போனதாக புகார் வழங்கிய பெற்றோரிடம் தகவல் அனுப்பிய பொலிஸார் வைத்தியசாலையில் வைத்து அவளுடைய உடலில் குத்தப்பட்டிருந்த பச்சை (டட்டு) மற்றும் அங்க அடையாளங்களை உறுதி செய்துள்ளதுடன் கதறி அழுதுள்ளனர்.

இதேவேளை இளம்பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிஸார் நடத்திய சோதனையில் அவரின் மார்பு பகுதி, முகம், பிறப்பு உறுப்பு கத்தியால் குத்தி சேதப்படுத்தப்படிருந்துள்ளது. முதுகு வயிற்று பகுதிகளிலும் கத்தி குத்து காயங்கள் இருந்துள்ளது. இடுப்பு எலும் முறிந்நு இருந்துள்ளது. உடலின் ஏனைய பகுதியிலும் எழும்புகள் உடைந்துள்ளதையடுத்து இது கொலை என்று சந்தேகித்து வருகின்றனர்.

மேலும் அவரது தோளில் இருந்த சதைகளை தெருநாய்கள் கடித்து தின்றமையினால் குறித்த பகுதியில் சதைகள் இல்லாமல் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாவூத் சேக் என்பவர் தனது மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அவர் கொலை செய்து இருக்கலாம் என இளம்பெண்ணின் தந்தை சுரேந்திர குமார் பொலிஸாரி தெரிவித்தார்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சாரே கூறுகையில்,

சந்தேகத்தின் பேரில் தாவூத் சேக் என்ற நபரை பிடிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கொலை செய்யப்பட்ட நாளில் யாஷிரி ஷிண்டே அரை நாள் மட்டும் வேலை செய்துள்ளார்.

அன்று பிற்பகல் 3.30 மணி முதல் 4 மணி வரையிலான நேரத்தில் கொலை சம்பவம் நடந்து இருக்கலாம். கொலைக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்