
வெட்டுப்புள்ளிகள் தொடர்பான அறிவிப்பு
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை விரைவில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி 87,000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் போதிய பணியாளர்கள் இன்மையால் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனினும் அடுத்த மாத இறுதிக்குள் வெட்டுப்புள்ளிகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு 43,000ற்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
