கணவனை வெட்டி கொன்ற மனைவி: பொலிஸாரால் கைது
இந்தியாவில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கணவனை வெட்டி கொன்ற மனைவி உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
நாட்டரசன்கோட்டையை சேர்ந்த கருப்பசாமி என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் குடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவும் குடித்துவிட்டு போதையில் மனைவி, மகள்கள் மற்றும் மருமகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் மனைவி அரிவாளால் கணவரை வெட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர். சத்தம் கேட்டு சென்று பார்த்த உயிரிழந்தவரின் தங்கை கொடுத்த தகவலையடுத்து பொலிஸார் 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
