
பாடசாலை மாணவன் மீது தாக்குதல் : மூவர் கைது
இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல இ/நிரியெல்ல தமிழ் வித்தியாலயத்தில் சாதாரண தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர் மீது பாடசாலை நேரத்தில், தோட்ட அதிகாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான மாணவன் நிவித்திகல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அத்தோட்ட பொதுமக்கள் , இளைஞர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் நிவிதிகல பொலிஸ் நிலையத்திற்கு குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவித்ததை அடுத்து தாக்குதல் நடத்திய மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
தாக்குதல் தொடர்பில் நிவித்திகல பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்துவதுடன் சந்தேக நபர்களை நாளை புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
