கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு

கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு

கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு

⭕இன்று கணினி , செல்ஃபோன் என டிஜிட்டல் திரைகளைக் காணும் கண்கள் ஏராளம். அவர்களுக்கு நிச்சயம் கண் பார்வை குறித்த பிரச்னைகளை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடலாம். எனவே ஆபத்துகளை வரும்முன் தடுப்பதுபோல் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சில உணவுகளை தினம் சாப்பிடுவது நல்லது. அந்தவகையில் அது என்னென்ன உணவுகள் என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

முட்டை

🔶முட்டைகளில் லூடெய்ன் மற்றும் ஜீஜெனாதின் இருப்பதால், வயதான காலத்தில் ஏற்படும் கண் பிரச்சனைகளிலிருந்து இது காக்கிறது. மேலும் முட்டைகளில் வைட்டமின் C, வைட்டமின் E மற்றும் ஜிங்க் அதிகளவில் இருப்பதால் கண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது.

பச்சை இலை காய்கறிகள்

🔶பச்சை இலைக் காய்கறிகளில் அதிக இரும்புச்சத்து, கண் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்கள் உள்ளன. கீரை, முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலி ஆகியவை நம் கண் பார்வையை பலப்படுத்துகின்றன.

தக்காளி

🔶தக்காளியில் உள்ள லைகோபின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட்டு ஒட்டுமொத்த கண் சார்ந்த பிரச்சினைகளையும் தீர்க்கும். கண் பார்வையை மேம்படுத்தும் தன்மை கொண்டது.
குறிப்பாக கண் புரை நோய் உள்ளிட்டவை வராமல் தடுக்க உதவி செய்யும்.

 கேரட்

🔶கேரட் என்றாலே அது கண்ணுக்கு நல்லது என்று நமக்குத் தெரியும். ஆனால் அதிகமாக சாப்பிடவே மாட்டோம். குழந்தைகளும் கேரட்டை பொரியலாக சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு பச்சையாக சாலட்டாக கேரட்டை நறுக்கிக் கொடு்தால் சாப்பிடுவார்கள். அதேபோல கேரட் ஜூஸ் தினமும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிலுள்ள வைட்டமின் ஏ (பீட்டா – கரோட்டீன்) நம்முடைய கண் பார்வைத் திறனை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது.

அசைவ உணவுகள்

🔶முட்டையில் விட்டமின் A அதிகம் காணப்படுகின்றன. மீனில் நல்ல கொழுப்பு
அமிலம் அதிக அளவில் உள்ளது. இது கண்களுக்கு மிகவும் அவசியமான சத்து
ஆகும். ஆட்டு ஈரலில் விட்டமின் A காணப்படுகின்றன. 100 கி ஈரலில் 15.6 மி.கி
விட்டமின் ஏ  உள்ளது. இந்த உணவின் மூலம் கண்களின் ஆரோக்கியத்தை
பாதுகாக்கலாம்.

வள்ளிக்கிழங்கு

🔶சர்க்கரை வள்ளிக் கிழங்கை நாம் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் அதில் ஏராளமான நார்ச்சத்துக்களும் கனிமங்களும் இருக்கின்றன. குறிப்பாக இதிலுள்ள அதிகப்படியான பீட்டா கரோட்டின் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ- வைக் கொடுத்து கண் பார்வையை மேம்படுத்துகிறது.

பாதாம்

🔶பாதாமில் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால் கண்பார்வை அதிகரிக்கிறது. இதனுடன், கண்களின் ஆரோக்கியமான திசுக்களை சேதப்படுத்தும் நிலையற்ற மூலக்கூறுகளிலிருந்தும் பாதாம் கண்களை பாதுகாக்கிறது. தினசரி பாதம் பருப்பை சாப்பிட்டால் கண் பார்வை மேம்படும். 3-4 பாதாம் பருப்பை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிடலாம்.

பருப்பு வகைகள்

🔶பருப்பு வகைகள் துத்தநாகம் மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாக செயல்படுகிறது. இயற்கையாகவே கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பருப்பு வகைகள் பெரிதளவில் பயன்படுகிறது.

கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்