புதினா தண்ணீர் பயன்கள்
புதினா தண்ணீர் பயன்கள்
🟩புதினா இலைகள் மிகவும் ஆரோக்கியமானவை. உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. இதில் ஜூஸ் குடித்தால் புத்துணர்ச்சியூட்டும் பானமாக அமைகிறது. ஆனால் புதினாவை குடிக்கும் தண்ணீரில் போட்டு அதனுடன் லெமன் மற்றும் நெல்லிக்காயும் போட்டு குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். இதில் கலோரிகள் இல்லை. புதினா சாப்பிடுவதால் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது காலையில் வெறும் வயிற்றில் புதினா நீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
🍀புதினாவில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடை அதிகரிக்காது. புதினா தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு, இந்த புதினா நீர் அவர்களின் எடை இழப்பு பயணத்தில் பயனுள்ளதாக இருக்கும்.
🍀புதினா, எலுமிச்சை இரண்டிலுமே வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், செல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. புதினா தண்ணீரை தொடர்ந்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வைட்டமின் சி ஒரு வகை ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், புதினா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, பல நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
🍀எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது என்சைம் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், கல்லீரலைத் தூண்டுகிறது. எலுமிச்சை ஒரு சிறந்த இயற்கையான நச்சு நீக்கியாக இருப்பதால் செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. தொடர்ந்து புதினா லெமன் வாட்டரை உட்கொள்வது உடல் அமைப்பைச் சுத்தப்படுத்தி, உடலைச் சிறப்பாக செயல்பட வைக்கிறது.
🍀புதினா வயிற்றுக்கு ஆரோக்கியமானது. இது அஜீரணம் மற்றும் வாயு பிரச்சனையை நீக்குகிறது. வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் புதினா சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்கவும். இது வீக்கம், அஜீரணம், வாயு மற்றும் பிற பிரச்சனைகளை நீக்குகிறது.
🍀நமது உடல் எப்போதுமே நீர்ச்சத்துடன் இருக்க வேண்டுமானால் புதினா தண்ணீரைக் குடிக்கலாம். இந்த சாறு கோடையில் மிகவும் ஆரோக்கியமானது. சூரிய ஒளியில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு இந்த ஆரோக்கியமான பானத்தை குடிக்கலாம். மழைக்காலத்திலும் உடல் சூடாக இருக்கும். மழைக்கால உஷ்ணத்தை தவிர்க்க இதை பருகலாம்.
🍀மனஅழுத்ததை குறைக்க புதினா தண்ணீர் உதவுகிறது. புதினா, ஆயுர்வேத மருந்துகளில் மனஅழுத்தத்தை குறைத்து உங்களை மனஅமைதியுடன் வைத்துக்கொள்வதற்கு உதவும் ஒரு மருந்தாகும். இது உடலை குளிர்வித்து, உங்கள் மனதை அமைதியாக்கும் ஒன்றாகும். உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கிறது.
🍀புதினாவில் வைட்டமின் ஏ மற்றும் சாலிசிலிக் அமிலம் நிறைய உள்ளது. இது உங்கள் சருமத்தை காக்க உதவுகிறது. புதினா தண்ணீரில், பூஞ்ஜைக்கு எதிரான குணங்கள் மற்றும் பாக்டீரியாவுக்கு எதிரான குணங்கள் வீக்கம் மற்றும் முகப்பருக்களை குறைக்க உதவுகிறது.
🍀உடலில் டெஸ்டோஸ்ரோன் அளவை குறைத்து, ஹார்மோன் சமநிலையைப் பேண புதினா தண்ணீரை பருகவேண்டும். இது உங்கள் ஹார்மோன் அளவை பராமரிக்க உதவுகிறது. இதனால் உங்கள் உடலில் ஹார்மோன் சமநிலை பேணப்படுகிறது. உடலில் ஹார்மோன்கள் சமமின்மையால், இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன், கருமுட்டை உருவாவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
புதினா தண்ணீர் பயன்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்