எத்தியோப்பியாவில் மண்சரிவுகளில் சிக்கி 229 பேர் பலி

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட இரண்டு மண்சரிவுகளில் சிக்கி 229 பேர் உயிரிழந்துள்ளதோடு, அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பலத்த மழையினால் எத்தியோப்பியாவில் கோஃபா மண்டலத்தின் தொலைதூர மலைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் திங்கட்கிழமை காலை மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், மண்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.

10 பேர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தேடுதல் பணியில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

கோஃபா என்பது தெற்கு எத்தியோப்பியா என்று அழைக்கப்படும் மாநிலத்தின் ஒரு பகுதியாகும், இது தலைநகரான அடிஸ் அபாபாவிற்கு தென்மேற்கே 320 கிமீ (199 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

சமீபத்திய மாதங்களில் பலத்த மழை  மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் தெற்கு எத்தியோப்பியாவும் ஒன்று என மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு  தெற்கு எத்தியோப்பியாவில் பலத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்