ஆண்களின் முகம் வெள்ளையாக உதவும் ஃபேஸ் பேக்

ஆண்களின் முகம் வெள்ளையாக உதவும் ஃபேஸ் பேக்

ஆண்களின் முகம் வெள்ளையாக உதவும் ஃபேஸ் பேக்

💢பெண்களை விட ஆண்களின் சருமம் சற்று கடினமாக இருக்கும். அப்படிப்பட்ட சருமத்திற்கு ஆண்கள் சரியான பராமரிப்புக்களைக் கொடுக்காமல் இருந்தால், சருமத்தில் இறந்த செல்கள் அதிகம் தேங்கி, கருமையாகிவிடும். பொதுவாக பெண்களை விட ஆண்கள் தான் வெயிலில் அதிகம் சுற்றுவார்கள்.

💢இதன் காரணமாகவே ஆண்களின் சருமம் பெண்களுடன் ஒப்பிடுகையில் சற்று கருப்பாக இருக்கும். இந்நிலையில் ஆண்கள் தங்களின் சரும நிறத்தை வெள்ளையாக்க விரும்பினால், ஒருசில ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போட்டு வந்தாலே போதும். அந்தவகையில் கருமையாக இருக்கும் ஆண்களின் சருமத்தை வெள்ளையாக்க உதவும் ஃபேஸ் பேக்குகள் என்ன என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

பப்பாளி மற்றும் வாழைப்பழ ஃபேஸ் பேக்

  • ஒரு பௌலில் ஒரு துண்டு பப்பாளி மற்றும் ஒரு துண்டு வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அதில் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
  • இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

எலுமிச்சை தேன் ஃபேஸ் பேக்

  • ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அவற்றை நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
  • இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை, இரவு நேரத்தில் பயன்படுத்தி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கரும்புச்சாறு மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்

  • ஒரு பௌலில் சிறிது கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அதில் கரும்புச்சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
  • இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துவது நல்லது.

ஆரஞ்சு, முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்

  • ஒரு பௌலில் 1 டீஸ்பூன் முல்தானி மெட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அதில் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
  • இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், முகக்கருமை நீங்கும்.

ஓட்ஸ் மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்

  • ஒரு பௌலில் 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் 3 டீஸ்பூன் தக்காளி சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
  • இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால், கருமையான சருமம் வெள்ளையாகும்.ஆண்களின் முகம் வெள்ளையாக உதவும் ஃபேஸ் பேக்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்