
அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாளர் பதவி விலகல்
அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாளர் கிம் சீட்டில் பதவி விலகியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பட்லர் நகரில் பிரசார கூட்டமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காயமடைந்தார்.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளின் பின்னர் கிம் சீட்டிலை பதவி விலகுமாறு ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், குறித்த சம்பவத்தின்போது, ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாட்டிற்குத் தாம் முழுப் பொறுப்பையும் ஏற்று பதவி விலகுவதாக அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாளர் கிம் சீட்டில் தமது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
