கருந்தேள் கொட்டி சிறுவன் பலி

இந்தியாவில் திருத்தணி அருகே, கருந்தேள் கொட்டி சிறுவன், மயக்கம் அடைந்து உயிரிழந்துள்ளார்.

திருத்தணிப் பகுதியைச் சேர்ந்த ஜோதிராமன் ( வயது 11 ) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தபோது கொடிய விஷம் கொண்ட கருந்தேள் ஒன்று அவரை கடித்ததாக கூறப்படுகிறது.

கொட்டியது தேள் எனத் தெரியாமல் விளையாட்டில் மூழ்கிய சிறுவன், பின்னர் பெற்றோரிடம் ஏதோ ஒன்று தன்னை கொட்டியதாகவும், மயக்கம் வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறுவன் விளையாடிய இடத்தில் கருந்தேள் இருந்ததை கவனித்த பெற்றோர், சிறுவனை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்