
13 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்கள்!
13 வயது சிறுமியை 3 முதியவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் இந்திய தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் பாடசாலையில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
குறித்த சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படும் நிலையில் கடந்த 21 ஆம் திகதி பாடசாலை விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் இருந்துள்ளார்.
அவ்வேளை சிறுமியின் அவரது தாய் கூலி வேலைக்கு சென்றுவிட்டார்.
பின்னர் சிறுமியின் தாய் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, அவரது வீட்டிற்கு சிலர் வந்து சென்றதாகவும், அது பற்றி சிறுமியிடம் விசாரிக்கும்படியும் அக்கம், பக்கத்தினர் கூறியுள்ளனர்.
இது பற்றி சிறுமியின் தாய், சிறுமியிடம் விசாரித்துள்ளார்.
அப்போது மூன்று வயோதிபர்கள் வந்து தன்னை மிரட்டி, மாறி, மாறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி அந்த சிறுமி அழுதுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
ராஜேந்திரன் (வயது 65) மற்றும் சகோதரர்களான பன்னீர்செல்வம் (வயது 76), சின்னத்தம்பி (வயது 70) ஆகியோரே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
அதன்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் பொலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், பன்னீர்செல்வம், சின்னத்தம்பி ஆகியோரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
