
முதியோர் பராமரிப்பு நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி
குரோஷியாவில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
குறித்த முதியோர் பராமரிப்பு நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த துப்பாக்கிதாரி ஒருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிதாரி விடுதியொன்றில் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
