சுகாதார அவசரநிலை அறிவிப்பு

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 14 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு நிபா வைரஸ் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தொடர்பில் இந்திய மத்திய சுகாதார அமைச்சு கேரள சுகாதார அமைச்சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிபா வைரஸ் தொற்றுறுதியான நிலையில் உயிரிழந்த குறித்த சிறுவன் பாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அந்த பகுதி மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கக்கூடிய 60 பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் பாண்டிக்காடு மக்களை முகக்கவசம் அணியுமாறும் வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து இந்தியாவின் கேரள மாநிலத்தில் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் என்பது பன்றிகள் மற்றும் வெளவால் போன்றவற்றிலிருந்து பரவும் ஒரு வகை வைரஸாகும்.

இதனை பெருந்தொற்றாக மாற்றமடையக்கூடிய முன்னுரிமையளிக்கப்பட வேண்டிய நோய்க்கிருமியாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்