மழைக்காலத்தில் ஜொலிக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்
மழைக்காலத்தில் ஜொலிக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்
மழைக்காலத்தில் ஜொலிக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்
⭕மழைக்காலம் வந்துவிட்டாலே சோம்பேறித்தனம் அதிகரித்துவிடும். சோம்பேறித்தனம் அதிகரித்தால், தினசரி செய்யும் சில வேலைகளை கூட சிலர் தள்ளிப் போடுவார்கள். முக்கியமாக தினமும் சருமத்திற்கு கொடுக்கும் சில பராமரிப்புக்களைக் கூட பலர் தவிர்ப்பதுண்டு.
⭕நிறைய பேர் மழைக்காலத்தில் காலநிலை ஈரப்பதமாக இருப்பதால், சரும வறட்சி போன்ற எவ்வித சரும பிரச்சனைகளும் வராது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மற்ற பருவ காலங்களைப் போலவே மழைக்காலத்திலும் சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் சரியான பராமரிப்புக்களை தவறாமல் மேற்கொண்டு வந்தால், அவற்றைத் தவிர்க்கலாம்.
⭕அதுவும் சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுக்க பார்லருக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டு சமையலறையில் உள்ள இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க்குகளை போட்டு வந்தாலே போதும். ஃபேஸ் மாஸ்க்குகளை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை பயன்படுத்தி வந்தால், சருமம் எப்போதும் அழகாகவும், வெள்ளையாகவும், பிரச்சனைகளின்றியும் இருக்கும். மழைக்காலத்திலும் அழகாக ஜொலிக்க போட வேண்டிய ஃபேஸ் மாஸ்க்குகள் என்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
கடலை மாவு மற்றும் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்
- ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் 2-3 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1-2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
- பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் அதை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
- இந்த ஃபேஸ் பேக்கை சென்சிடிவ் சருமத்தினரைத் தவிர, மற்ற அனைத்து வகையினரும் பயன்படுத்தலாம்.
ஓட்ஸ் மற்றும் முட்டை மாஸ்க்
- ஒரு பௌலில் 3 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர், 1 முட்டையின் வெள்ளைக்கரு, 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
- பின்பு அதை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
- இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
பழ ஃபேஸ் மாஸ்க்
- ஒரு பௌலில் 1 இன்ச் துண்டு வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் பீச் பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் 1 ஸ்ட்ராபெர்ரி மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு மசித்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
- பின்பு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
- இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால் நல்ல பலனைப் பெறலாம்.
முல்தானி மெட்டி ஃபேஸ் மாஸ்க்
- ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
- பின் அதை முகத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
- இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம். ஆனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் அது சரும வறட்சியை இன்னும் அதிகரிக்கும்.
ஓட்ஸ் மற்றும் ரோஸ்வாட்டர் மாஸ்க்
- ஒரு பௌலில் 3 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி, 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
- பின் அதை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
- இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
மழைக்காலத்தில் ஜொலிக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்