கருப்பான முகம் பொலிவு பெற உதவும் காபித் தூள்
கருப்பான முகம் பொலிவு பெற உதவும் காபித் தூள்
கருப்பான முகம் பொலிவு பெற உதவும் காபித் தூள்
💢தினமும் வேலைக்கு வெயிலில் சென்று உங்கள் முகம் பொலிவிழந்து கருப்பாக உள்ளதா? உங்கள் முகத்தில் உள்ள கருமையை நீக்கி, முகப்பொலிவை அதிகரிக்க நினைக்கிறீர்களா? முகம் கருமையாக காட்சியளிக்க இறந்த செல்கள் சருமத்தில் அதிகம் தேங்கியிருப்பது காரணமாக இருக்கலாம். இப்படி முகத்தில் தேங்கியுள்ள இறந்த செல்களை நீக்கினாலே, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
💢சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க ஸ்க்ரப்பை பயன்படுத்த வேண்டும். கடைகளில் கெமிக்கல் கலந்த பலவிதமான ஸ்க்ரப்கள் விற்கப்பட்டாலும், அவற்றில் உள்ள கெமிக்கல்கள் சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தக்கூடும். மேலும் கெமிக்கல்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்தால், சரும செல்களின் ஆரோக்கியம் பாழாகும்.
💢ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒரு பொருள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சரும பொலிவையும், அழகையும் மேம்படுத்தும். அது தான் காபித் தூள். இந்த காபித் தூளுடன் ஒருசில பொருட்களை சேர்த்து, ஸ்க்ரப் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் சரும பொலிவு மேம்படும். அது என்னென்ன என்பதை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
காபித் தூள் மற்றும் தேன் ஸ்க்ரப்
- ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் மென்மையாக ஸ்க்ரப் செய்து, காய வைக்க வேண்டும்.
- பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
காபித் தூள் மற்றும் வாழைப்பழ ஸ்க்ரப்
- ஒரு பௌலில் நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து, அதை நன்கு மென்மையாக மசித்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக ஸ்க்ரப் செய்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
- இந்த ஸ்க்ரப்பை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.
காபித் தூள் மற்றும் தயிர் ஸ்க்ரப்
- ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, மென்மையாக 5-10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
- பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
காபித் தூள் மற்றும் பட்டை ஸ்க்ரப்
- ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1 டீஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
- பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
- பின்பு 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
- இந்த ஸ்க்ரப்பை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
காபித் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப்
- ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-12 நிமிடம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
- பின்பு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, துணியால் துடைக்க வேண்டும்.
- இறுதியாக மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
கருப்பான முகம் பொலிவு பெற உதவும் காபித் தூள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்