போதையில் எருமை மாட்டை பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள்!

கஞ்சா போதையில் எருமை மாடொன்றை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது

இந்தியாவின் ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரம் அருகே உள்ள தொக்கலபூடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பில்லி சத்யநாராயணா.

கடந்த 05 ஆம் திகதி காலை வீரவாசரம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அவர், என்னுடைய விவசாய நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த எருமையை நேற்று இரவு சிலர் கஞ்சா போதையில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.

அவர்களை பிடித்து உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று மனு அளித்தார், ஆனால் பொலிஸார் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டனர்.

இந்த நிலையில் அவர் மாவட்ட ஆட்சியர் நாகராணியிடம் தன்னுடைய குற்றச்சாட்டை மனுவாக கொடுத்தார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கால்நடை மருத்துவர் விரைந்து சென்று பாதிக்கப்பட்டதாக கூறப்படும் எருமைக்கு வைத்திய பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார்.

பொலிஸார் அங்கு சென்று அந்த பகுதியை ஆய்வு செய்து எருமையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்