வியர்குருவைப் போக்க சில வீட்டு வைத்தியங்கள்
வியர்குருவைப் போக்க சில வீட்டு வைத்தியங்கள்
வியர்குருவைப் போக்க சில வீட்டு வைத்தியங்கள்
🟤கோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடிய ஓர் பிரச்சனை தான் வியர்குரு. அதிகப்படியான வெயிலால் போதிய காற்றோட்டம் கிடைக்காமல், வியர்வை அதிகம் வெளியேறுவதால் வியர்க்குரு வரும். இதனைத் தவிர்ப்பதற்காக பலரும் காட்டன் உடைகளை உடுத்துவார்கள் மற்றும் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுப்பார்கள்.
🟤இருப்பினும் வியர்குரு வந்துவிடும். ஆனால் ஒருசில இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் கோடையில் வரும் வியர்குருவைத் தடுக்கலாம். அந்தவகையில் என்னென்ன இயற்கை வழிகள் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
🍀அருகம்புல்லில் நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-செப்டிக் பொரள் உள்ளது. இது வியர்வையினால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தடுக்கும். அதற்கு 4:1 என்ற விகிதத்தில் அருகம்புல் மற்றும் மஞ்சள் தூளை எடுத்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.
🍀வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, வியர்குருவால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தடுக்கும். எனவே வியர்குரு அதிகம் இருந்தால், வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.
🍀கோடையில் சருமத்திற்கு சோப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக, பாசிப்பருப்பு மாவைக் கொண்டு தேய்த்து குளித்து வர வியர்குரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதற்கு பாசிப்பருப்பு மா, உளுத்தம் பருப்பு மா, கடலைப்பருப்பு மா ஆகியவற்றை ஒன்றாக சரிவிகிதத்தில் கலந்து, தினமும் அவற்றைக் கொண்டு தேய்த்து குளிக்க வேண்டும்.
🍀மருதாணி இலைகளை சிறிது அரைத்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் வியர்குரு நீங்கும்.
🍀கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும் வியர்குருவை சந்தனம் கொண்டும் போக்கலாம். இதற்கு சந்தனத்தில் உள்ள குளிர்ச்சித்தன்மை தான் காரணம். அதற்கு சந்தனப்பொடியை ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
🍀தயிரின் குளிர்ச்சித்தன்மையும் வியர்குரு பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் தரும். அதற்கு தயிரை சருமத்தில் தடவி நன்கு உலர்ந்ததும், குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டும்.
🍀கற்றாழை செடியின் தோலை சீவினால், உள்ளே ஜெல் போன்று இருக்கும். இதை வேர்க்குரு பாதித்த பகுதிகளில் தடவி, 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். கற்றாழை மென்மையும் வழுவழுப்பும் கொண்டது. இதை இரவு நேரத்தில் படுக்கும் போது பாதித்த பகுதிகளில் தேய்த்துவிட்டு, காலையில் குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். தொடர்ந்து கற்றாழையை பயன்படுத்தி வந்தால், வேர்க்குரு நீங்கும்.
🍀வெள்ளரிக்காயை விழுதாக அரைத்து வியர்க்குரு உள்ள இடங்களில் பூசி 2- 3 மணி நேரம் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரில் குளிக்க வியர்க்குரு குணமாகும்.
வியர்குருவைப் போக்க சில வீட்டு வைத்தியங்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்