மனைவி உட்பட 42 பெண்களைக் கொடூரமாகக் கொன்ற நபர்!

கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களைக் கொடூரமாகக் கொன்று புதைத்தமைக்காக ஜோமைசி கலிசியா (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைவிடப்பட்ட கல்குவாரியில் உள்ள குப்பைக் கிடங்கிலிருந்து தொடர்ச்சியாகப் பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை கென்யாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறித்த கல்குவாரிக்கு அருகிலிருந்த சந்தேக நபரின் வீட்டைச் சோதனை செய்ததில், 10 தொலைபேசிகள், மடிக்கணினி, அடையாள அட்டைகள், பெண்களின் ஆடைகள், கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உடல்களை அப்புறப்படுத்த உபயோகித்த 9 சாக்குகள் என்பனவற்றை பொலிஸார்  கைப்பற்றினர்.

தனது மனைவியின் கொலையில் ஆரம்பித்து அடுத்தடுத்து 42 பெண்களைக் கொன்று அவர்களின் உடல்களைக் கைவிடப்பட்ட குவாரியில் அப்புறப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நபர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்