
தேநீர் அருந்திக்கொண்டிருந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு
தாய்லாந்தின் தலைநகர் பெங்கொக்கில் அமைந்துள்ள பிரபலமான சொகுசு விடுதியொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்கள் பயன்படுத்திய தேநீர் கோப்பையில், சயனைட் (விஷம்) காணப்பட்டதுடன், அதனை உட்கொண்டதால் இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இறந்தவர்களில் ஒருவர், மற்றவர்களை விஷம் குடிக்க வைத்ததன் பின்னணியிலிருந்ததாகவும், அவர் கடனினால் பாதிக்கப்பட்டவர் என்றும் அந்நாட்டுக் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அந்நாட்டுக் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
