ஆண்களின் உடல் சோர்வை நீக்கும் உணவுகள்
ஆண்களின் உடல் சோர்வை நீக்கும் உணவுகள்
ஆண்களின் உடல் சோர்வை நீக்கும் உணவுகள்
🔺தற்போது நிறைய ஆண்கள், ஏன் இளம் வயதினர் கூட உடலில் போதுமான ஆற்றல் இல்லாமல் இருக்கிறார்கள். ஒருவரது உடலில் ஆற்றல் குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்களைத் தெரிந்து கொண்டால், அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்கலாம்.
🔺ஒருவருக்கு உடல் சோர்வு வருவதற்கு பின்வருவன காரணமாக இருக்கலாம். அதில் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை அதிகமாக உண்பது, குறைவான டெஸ்டோஸ்டிரோன் அளவு, இரும்புச்சத்து குறைபாடு, குறட்டை பிரச்சனை, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, தைராய்டு பிரச்சனை போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் உடல் சோர்வு பிரச்சனையை சரிசெய்ய சில உணவுகளும் உதவி புரியும். அந்த உணவுகளை தேர்ந்தெடுத்து தினசரி உணவில் சேர்த்து வந்தால், உடல் சோர்வு பிரச்சனையைத் தவிர்க்கலாம். இப்போது ஆண்கள் சந்திக்கும் உடல் சோர்வு பிரச்சனையை போக்கி, உடலுக்கு ஆற்றலை வழங்கும் உணவுகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
பாதாம்
🔺பாதாமில் பயோடின் உள்ளது. இது தான் வைட்டமின் பி3 சத்தாகும். இந்த வைட்டமின் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உணவில் இருந்து ஆற்றலை உருவாக்க அவசியமான ஒன்றாகும். எனவே உடல் சோர்வை போக்க தினமும் ஒரு கையளவு பாதாமை சாப்பிடுங்கள்.
தேன்
🔺டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவால் உடல் சோர்வை சந்திக்கும் ஆண்கள், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கவும், உடலின் ஆற்றலை மேம்படுத்தவும் தேனை தினமும் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் தேனில் போரான் உள்ளது. இது டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்த உதவுவதோடு, எலும்புகள் மற்றும் தசைகளை வலுவாக்கவும் உதவுகிறது.
முட்டை
🔺ஆண்கள் தினமும் முட்டையை தங்களின் உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன் கிடைப்பதோடு, அத்தியாவசிய சத்துக்களும் கிடைத்து, உடல் ஆற்றலுடன் இருக்கும். எனவே உடல் சோர்வை சந்திக்கும் ஆண்கள் முட்டையை தினமும் உட்கொள்ள வேண்டும்.
வாழைப்பழம்
🔺வாழைப்பழம் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் அற்புதமான பழம். மேலும் இதில் வைட்டமின் பி6, பொட்டாசியம், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் வளமான அளவில் உள்ளன. எனவே மிகுந்த களைப்பை சந்திப்போர் தினமும் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது. அதுவும் வாழைப்பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் தயாரித்து குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
பூண்டு
🔺பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள், ஒருவரது கார்டிசோல் அளவைக் குறைக்கும் திறனைக் கொண்டது. இந்த கார்டிசோலை சுரக்கும் சுரப்பி தான் டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்கிறது. எனவே ஒருவர் மன அழுத்தமாக இருக்கும் போது, அது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி உட்பட உடலின் பிற செயல்பாடுகளையும் மோசமாக பாதித்து, உடல் சோர்வை உண்டாக்குகின்றன. ஆனால் பூண்டை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு மற்றும் மெட்டபாலிச அளவு சீராக இருக்கும்.
கொழுப்புள்ள மீன்
🔺உடல் சோர்வை சந்திப்பவர்கள் தங்களின் உணவில் மீனை சேர்ப்பது நல்லது. மீனில் வைட்டமின் பி12 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அதோடு, மீனில் உள்ள ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 உடன் இணைந்து, உடலில் இரும்புச்சத்து செய்யும் வேலையை மேம்படுத்துகிறது. மறுபுறம், அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடல் சோர்வை ஏற்படுத்தும் உடலினுள் உள்ள வீக்கத்தை கணிசமாக குறைக்கிறது. எனவே சால்மன், டுனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது.
ஆண்களின் உடல் சோர்வை நீக்கும் உணவுகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்