பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 22 பேர் உயிரிழப்பு

மத்திய நைஜீரியாவில் பாடசாலை கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் குறித்த விபத்தில் 30 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 150க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததாகவும், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்