
வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு
இந்தியாவில் சென்னை சிறுசேரி அருகே நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மென்பொருள் நிறுவன ஊழியர்களை அவரவர் வீடுகளில் இறக்கிவிட்டு விட்டுத் திரும்பிய கார் துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் வந்தபோது பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் கார் சாரதி படுகாயமடைந்த நிலையில், அவருடன் பாதுகாப்புக்காகச் சென்ற நபர் ஒருவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கிரேன் உதவி கொண்டு கார் மீட்கப்பட்ட நிலையில், தூக்கக்கலக்கத்தில் காரை ஓட்டியதால் விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
