மறைந்த இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி
இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் அவரது பூதவுடல் இன்று புதன் கிழமை பிற்பகல் நான்கு மணி வரை வைக்கப்பட்டு நாளைய தினம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இரா.சம்பந்தனின் பூதவுடல் அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஏழாம் திகதி இறுதிக்கிரியைகள் இடம்பெற்று மாலை 4 மணியளவில் இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்