வாகன விபத்து: சிறுவர்கள் உட்பட 7 பேர் காயம்

பண்டாரகம – களுத்துறை வீதியில் கல்துடே மரகஸ் சந்தியில் காரொன்றும் வேனொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற வேனும், காரொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்களில் 8 மாத குழந்தையும் 2 வயது ஆண் குழந்தையும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் காரின் சாரதி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காரின் முன் இருக்கைக்கு அருகில் ஓட்டுநருக்கு சொந்தமானது என நம்பப்படும் ஓட்டுநர் உரிமம் அடங்கிய பணப்பையை பொலிஸார் மீட்டுள்ளனர்.

தற்போது சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்