மனைவி, ஒரு வயது குழந்தையுடன் இளைஞர் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவில் புதுச்சேரியில் மனைவி, ஒரு வயது குழந்தையுடன் வியாபாரி ஒருவர் எலி மருந்து உண்டது பற்றி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் தென்னல் கிராமத்தைச் சேர்ந்த விஜயகாந்த் என்ற வியாபாரியே இவ்வாறு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

வில்லியனூர் மேட்டுப்பாளையம் பூங்கா அருகே குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மயங்கி விழுந்துள்ளார். அவர்களை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது, குறித்த வியாபாரியின் சட்டைப் பையில் கடிதம் ஒன்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்

அதில் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க நண்பர் ஒருவரின் சொத்துப் பத்திரத்தை வாங்கி தங்கள் ஊரைச் சேர்ந்த ரமா தேவி என்பவரிடம் கொடுத்து 5 லட்ச ரூபாய் கடன் கேட்டதாகவும், அவர் பணத்தை தராததுடன் ஏற்கனவே கடன் கொடுத்தது போல போலி ஆவணம் தயாரித்து தம்மை மிரட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸார் குறித்த பெண்ணைத் தேடிச் சென்ற போது, அவர் குடும்பத்துடன் தலைமறைவானதாக தெரிய வந்துள்ளது. மேலும் வியாபாரியின் மனைவி மற்றும் குழந்தை சிகிச்சைக்குப் பின் நலமாக இருப்பதாகவும் வியாபாரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்