
வாகன விபத்து: மூன்று மாணவர்கள் படுகாயம்
இந்தியாவில் வேலூர் மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் 19 வயது மாணவியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 4 மாணவர்களும் கார் மூலமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரிமலைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்ததை அடுத்து மோட்டூர் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது.
அதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பை தாண்டி சரக்கு ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்த லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
